என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற வளாகத்தில் ராகுல், தி.மு.க. எம்.பி.க்கள் திடீர் போராட்டம்
  X

  பாராளுமன்ற வளாகத்தில் ராகுல், தி.மு.க. எம்.பி.க்கள் திடீர் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  புதுடெல்லி:

  கேரளாவில் இன்று (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

  அதன்படி, கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆட்டோக்களும் இயங்காமல் ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

  இதேபோல், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

  தமிழ்நாட்டிலும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இன்று அரசு அலுவலகங்களின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்நிலையில், இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதாதளம், கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ‘மேதாவித்தனமான வெற்றுப்பேச்சுகளை கைவிட்டு மக்களின் துயரங்களை போக்க நடவடிக்கை எடு, நாட்டு மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவதை கைவிடு, வேடிக்கையான துக்ளக் தர்பாருக்கு இடமளிக்க மாட்டோம்’ என இன்றைய போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
  Next Story
  ×