என் மலர்

  செய்திகள்

  பெண் என்ஜினீயரின் நிர்வாண படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியவர் கைது
  X

  பெண் என்ஜினீயரின் நிர்வாண படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் நிச்சயமான பெண் என்ஜினீயரின் நிர்வாண படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

  நகரி:

  ஐதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருபவர் ராஜூ. அதே நிறுவனத்தில் இளம்பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்தார்.

  அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் பெங்களூரில் உள்ள மற்றொரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

  இந்த நிலையில் ராஜூ அந்த பெண்ணின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யுமாறு தொந்தரவு கொடுத்தார்.

  ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்தார். ராஜூ போன் செய்தால் அவருடன் பேசுவதை தவிர்த்தார்.

  இந்த நிலையில் ராஜூ ஒவ்வொரு சிம்கார்டாக மாற்றி இளம்பெண்ணிடம் பேசி தொந்தரவு செய்தார். 8 சிம் கார்டுகள் மாற்றி அவர் பேசினார். ஆனாலும் இளம்பெண் அவரை புறக்கணித்தார்.

  இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் நிச்சயமானது. இதை அறிந்ததும் ராஜூ அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் நட்பாக பழகிய போது லேப்டாப்பை ராஜூ வாங்கி பார்ப்பது வழக்கம்.

  அப்போது அதில் அந்த பெண்ணின் நிர்வாண படங்கள் இருந்தன. அந்த படங்களை ராஜூ ஏற்கனவே திருடி வைத்திருந்தார்.

  இந்த நிலையில் நிர்வாண படங்களை மாப்பிள்ளை வீட்டாரின் இ-மெயிலுக்கு ராஜூ அனுப்பி வைத்தார். இதுபற்றி மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதுபற்றி அந்த பெண் பெங்களூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஐதராபாத் சென்று சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜூவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×