என் மலர்

  செய்திகள்

  காஷ்மீர்: விடியவிடிய துப்பாக்கிச் சண்டை - இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
  X

  காஷ்மீர்: விடியவிடிய துப்பாக்கிச் சண்டை - இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இன்றுகாலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நேற்றிரவு முதல் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட நஹிட்காய் கிராமம் அருகாமையில் உள்ள மன்ஸ்போரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை ராஷ்டரிய ரைபிள்ஸ் மற்றும் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் நேற்று பின்னிரவு சுற்றிவளைத்தனர்.

  இதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  இன்று அதிகாலைவரை நீடித்த இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும், அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

  இதேபோல், சோபோர் மற்றும் குப்வாரா மாவட்டங்களிலும் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
  Next Story
  ×