search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
    X

    கொல்கத்தா அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

    மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீவிபத்தால் நோயாளிகள் பீதியடைந்தனர்.
    கொல்கத்தா:

    கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான சேத் சுக்லால் கர்னானி பொது மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    கரும்புகையுடன் எழுந்த தீப்பிழம்பை கண்ட நோயாளிகள் பீதியில் அலறி ஓட்டம்பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

    இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    Next Story
    ×