என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
Byமாலை மலர்21 Nov 2016 7:20 AM GMT (Updated: 21 Nov 2016 7:20 AM GMT)
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலை இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைத்தது.
மும்பை:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலை இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைத்தது. ஏவுகணைகளை கொண்டு நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம் மற்றும் 7500 டன் எடையுடையது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கப்பலை நாட்டுக்கு அர்பணித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமான இன்று, இந்திய கடற்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். கப்பல் உலக தரத்தில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
இதேபோன்று இந்திய தயாரிப்பில் உருவான ஐஎன்ஸ் கொல்கத்தா, கடந்த 2014-ம் ஆண்டும், ஐஎன்எஸ் கொச்சி, கடந்த 2015-ம் ஆண்டும், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
164 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பல் 7500 டன் எடையை சுமந்தபடி செல்லும் சக்தி கொண்டதாகும். இதே வகையிலான ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ கடந்த 16-8-2014 அன்றும், ‘ஐ.என்.எஸ். கொச்சி’ கடந்த 30-9-2015 அன்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இவ்விரு கப்பல்களை விடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன், தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ஏவுகணை, மற்றும் தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘பரக்-8’ ஏவுகணை போன்றவை ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பலை மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் இன்று நாட்டுக்கு அர்ப்பணம் செய்து வைத்தார். கடற்படை தலைமை தளபதி அணில் லன்பா உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மும்பையில் உள்ள மஸாகோன் கப்பல் கட்டும் பணிமனையில் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையின்கீழ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×