என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிட்டது சட்ட விரோதமானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Byமாலை மலர்21 Nov 2016 7:11 AM GMT (Updated: 21 Nov 2016 7:11 AM GMT)
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் அனந்த சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மேல்-சபை காங்கிரஸ் துணைத் தலைவர் அனந்த்சர்மா ரூபாய் நோட்டுகள் பிரச்சினை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியமானதாகும்.
ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த விஷயத்தில் சட்டப்படியான நடைமுறைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் தவறான இந்த செயல்பாட்டால் நாட்டில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்க வந்தவர் போல பிரதமர் மோடி நாடகமாடி ஏழை- எளிய மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்.
நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதிய ரூபாய் நோட்டுகளை அறிவிப்பதும், வெளியிடுவதும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு சட்டத்தில் இடமில்லை.
எனவே சட்ட விரோதமாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வெளியிட்டு கருப்பு பணத்தை ஒழிப்பது என்பது முரணாக உள்ளது. இதற்கிடையே கை விரலில் மை வைக்கிறார்கள். இது பற்றி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும்.
பிரதமர் மோடி சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். ஆனால் இந்த ஆட்சியில் தற்போது நடப்பது போல சர்வாதிகாரிகள் கூட செய்ய மாட்டார்கள். இது வெட்கக் கேடானது. மிகவும் வேதனையானது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழைகள், விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 33 கோடி உழைக்கும் வர்க்கத்தினர் திணறியபடி உள்ளனர்.
இவ்வாறு அனந்த்சர்மா கூறினார்.

Next Story
×