என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண ஒழிப்பு: பாராளுமன்றம் முன்பு புதன்கிழமை எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி:
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதம் 30-ந் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த 4 நாட்களாக அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மக்களின் தேவைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை வங்கிகளால் கொடுக்க இயலவில்லை. ஏ.டி.எம்.களிலும் மக்களால் பணம் பெற முடியவில்லை. இது நாடு முழுவதும் மக்களிடம் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
8 நாட்கள் மட்டுமே வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுக்க முடிந்தது. தற்போது பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்படி சொல்கிறார்கள். இது சாமானிய மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் பாதிப்பு விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றன. ரூபாய் நோட்டு பிரச்சினை பற்றி பிரதமர் மோடி உரிய பதில் விளக்கம் அளிக்காத வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இதற்கிடையே ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. எதிர் காலத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மிகவும் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒருங்கிணைப்பை மேற் கொண்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் 3 நாட்கள் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பின. இதையடுத்து இந்த கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது.
இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
பாராளுமன்றத்தில் தொடர்ந்து எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய கூட்டுப் பேராட்டத்துக்கும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை நீக்க கோரி எம்.பி.க்கள் கோஷம் எழுப்புவார்கள்.
இதற்கிடையே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் முன்பே சில பா.ஜ.க. தலைவர்கள் அவற்றை அவசரம், அவசரமாக மாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. சில பா.ஜ.க. தலைவர்களின் வீடுகளில் பண பரிமாற்றம் நடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போல புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் ஆவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
அதுபோல ரூபாய் நோட்டு பிரச்சினையில் இணைந்து செயல்பட மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜியும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் முடிவு செய்துள்ளனர். எனவே இன்னும் ஓரிரு தினங்களில் டெல்லியில் மீண்டும் அவர்கள் நடத்தும் போராட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்