என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்லாத நோட்டால் இதய அறுவை சிகிச்சை மறுக்கப்பட்ட மேலும் ஒரு குழந்தை பலி
Byமாலை மலர்21 Nov 2016 3:58 AM GMT (Updated: 21 Nov 2016 3:58 AM GMT)
புழக்கத்தில் இருக்கும் ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டதால் இதய அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி காத்திருந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலம் புனே நகரில் சமீபத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு இதயம்சார்ந்த கோளாறு இருந்ததால் அதன் பெற்றோர் இங்குள்ள கிங் எட்வர்ட் அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தையை அனுமதித்திருந்தனர்.
புனே நகரில் உள்ள ரூபி ஹால் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து இதய அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை உயிர் பிழைத்துவிடும் என உறவினர்கள் கூறியதால் அந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்துசென்ற குழந்தையின் தந்தை, ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டுள்ளார்.
சிகிச்சை செலவினங்களுக்கான உத்தேச மதிப்பீட்டு தொகையை தெரிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகம், உடனடியாக முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாயை செலுத்துமாறு அறிவுறுத்தியது.
அங்கும், இங்குமாக அலைந்து பணத்தை ஏற்பாடு செய்த குழந்தையின் தந்தை சுதாகர் கவான்ட்கேவ், பணத்தை கட்டியபோது, அதில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ரூபி ஹால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், அந்த தொகையையும் புதிய ரூபாய் நோட்டுகளாக செலுத்துமாறு நிபந்தனை விதித்தனர்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை தருகிறோம், 30 ஆயிரம் ரூபாயை ‘கார்ட்’ மூலம் செலுத்துகிறோம் என்று சுதாகர் கூறியதை அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் உயிரை காக்க வேண்டிய அந்த பொன்னான நேரத்தை வீணடித்ததால், இந்த பேரத்துக்கு இடையில் கிங் எட்வர்ட் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சுவாசித்துவந்த அந்த பச்சிளம் தளிர் பரிதாபமாக நேற்று உயிரிழந்தது.
ரூபி ஹால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் இந்த ஈவிரக்கமில்லாத செயலை அறிந்த பொதுமக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், குழந்தையின் தந்தை சுதாகர் கூறும் குற்றச்சாட்டை அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

Next Story
×