என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 நாள் பயணமாக ராணுவ தலைமை தளபதி சீனா செல்கிறார்
Byமாலை மலர்20 Nov 2016 11:55 PM GMT (Updated: 20 Nov 2016 11:55 PM GMT)
இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு 4 நாட்கள் பயணமாக இன்று சீனா செல்கிறது.
புதுடெல்லி:
இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் தலைமையில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு 4 நாட்கள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) சீனா செல்கிறது. இந்த குழுவினர் சீன ராணுவத்தின் தரைப்படை உள்ளிட்ட பல பிரிவுகளை பார்வையிட்ட பின் அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு, பரஸ்பர மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் பயங்கரவாதம் பற்றிய தகவல் பறிமாற்றம், மனிதாபிமான ஒத்துழைப்பு, அமைதி நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் இருநாட்டு ராணுவ கூட்டு நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Next Story
×