என் மலர்

  செய்திகள்

  சிமி என்கவுன்டர்: போலீசாருக்கு அறிவித்த பரிசுத் தொகை நிறுத்தி வைப்பு
  X

  சிமி என்கவுன்டர்: போலீசாருக்கு அறிவித்த பரிசுத் தொகை நிறுத்தி வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிமி என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசாஸ்காரர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது.
  போபால்:

  சிமி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் போபால் மத்திய சிறையில் காவலர் ஒருவரை கொன்றுவிட்டு, சிறையில் இருந்து தப்பியோடினர். தப்பியோடிய தீவிரவாதிகள் போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.

  சிமி என்கவுன்டர் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து போலீஸ்காரர்களுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 1-ந்தேதி அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் திட்டமிட்டு 8 பேரையும் சுட்டு கொன்று விட்டதாகவும், போலி என்கவுன்டர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  ஆனால், தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேவேளையில் இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

  நீதி விசாரணை நடைபெற இருப்பதால் விசாரணை முடியும் வரை வெகுமதி வழங்க இயலாது. விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னர் பரிசுத் தொகையை வழங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு முந்தைய முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

  இதுகுறித்து உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘என்கவுன்டர் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு, விசாரணை முற்றிலும் முடியும் வரை அரசால் பரிசுத் தொகை வழங்க இயலாது. நீதி விசாரணைக்கு முன்னர் பரிசுத் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், விசாரணை முடியும் வரை பரிசுத் தொகை கொடுக்கக்கூடாது என்பதுதான் பொருத்தமுடையதாக இருக்கும்’’ என்றார்.

  போலீஸ்காரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×