என் மலர்

  செய்திகள்

  ரூ.10,385 கோடி இழப்பீடு தரவேண்டும்: ரிலையன்ஸுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
  X

  ரூ.10,385 கோடி இழப்பீடு தரவேண்டும்: ரிலையன்ஸுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் எரிவாயு வயலில் இருந்து இயற்கை எரிவாயுவை துரப்பணம் செய்து எடுத்ததற்கு, ரூ.10,385 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
  புதுடெல்லி:

  ஆந்திர மாநிலம், கிருஷ்ணா கோதாவரி படுகையில் உள்ள தனது எரிவாயு வயலில் இருந்து, எரிவாயுவை முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் துரப்பணம் செய்து எடுத்துவிட்டதாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி., புகார் கூறியது.

  இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா கமிட்டி விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

  அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்:-

  * ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான இயற்கை எரிவாயு வயலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு வயலுக்கு 2009-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு, மார்ச் 31-ந் தேதி வரையில் 1100 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு சென்றுள்ளது. இதில் 900 கோடி கன மீட்டர் எரிவாயுவை ரிலையன்ஸ் துரப்பணம் செய்து எடுத்து, விற்பனை செய்து விட்டது.

  * ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எரிவாயு வயலில் இருந்து சென்ற இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் எடுத்தது அநியாயம்.

  * ஓ.என்.ஜி.சி. எண்ணெய் வயலில் இருந்து இயற்கை எரிவாயு, ரிலையன்ஸ் எண்ணெய் வயலில் கசிந்ததற்கு அல்லது இடம் பெயர்ந்ததற்கு உரிய இழப்பீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டும்.

  * ஓ.என்.ஜி.சி.யின் இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் சுரண்டியதற்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசுக்கு தர வேண்டும். இந்த இழப்பீட்டை பெறுகிற உரிமையும், தகுதியும் ஓ.என்.ஜி.சி.க்கு இல்லை. ஏனெனில், எண்ணெய் எரிவயலுக்கான உரிமை ஓ.என்.ஜி.சி.க்கு கிடையாது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  ஓ.என்.ஜி.சி.யின் கோதாவரி-பி.எம்.எல். மற்றும் கே.ஜி.டிடபிள்யுஎன்-98/2 இயற்கை எரிவாயு வயலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேஜி-டி6 எரிவாயு வயலுக்கு 11.122 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு சென்று விட்டது. இதன் தற்போதைய விலை மதிப்பு சுமார் ரூ.11 ஆயிரம் கோடி எனவும் தகவல்கள் கூறுகின்றன.

  ஓ.என்.ஜி.சி.யின் இயற்கை எரிவாயு வயல்களில் இயற்கை எரிவாயு வளம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் கேஜி-டி6 எரிவாயு வயலில் டி1 மற்றும் டி3 பகுதிகளில் இன்னும் இயற்கை எரிவாயு துரப்பணம் செய்து எடுத்து வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு வயலில் இருந்து இயற்கை எரிவாயுவை துரப்பணம் செய்து எடுத்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 1.55 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.10 ஆயிரத்து 385 கோடி) இழப்பீடு தர வேண்டும் என கேட்டு மத்திய அரசின் எண்ணெய் அமைச்சகம், அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

  இது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசின் கிடுக்கிப்பிடியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×