என் மலர்

  செய்திகள்

  ஊழல் புகாரில் அசாம் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கைது
  X

  ஊழல் புகாரில் அசாம் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் புகாரில் தலைநகர் கவுகாத்தியில் அசாம் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கைது செய்யப்பட்டார்.
  கவுகாத்தி:

  அசாம் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ராகேஷ் பால், அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளிலும், பணி நியமனங்களிலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட ரமாகாந்த பட்டிர் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராகேஷ் பாலின் ஊழல் பற்றி புதிய தகவல்கள் தெரியவந்தன.

  இந்நிலையில், தலைநகர் கவுகாத்தியில் இருந்த ராகேஷ் பாலை திப்ருகார் போலீசார் நேற்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். 2 மணி நேர விசாரணையின் முடிவில், ராகேஷ் பாலை கைது செய்தனர்.
  Next Story
  ×