என் மலர்

  செய்திகள்

  உத்திரகாண்ட்: பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 7 பேர் பலி
  X

  உத்திரகாண்ட்: பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 7 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்திரகாண்ட் மாநிலத்தில் மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  டேராடூன்:

  உத்திரபிரதேச மாநிலம் பவுரி மாவட்டத்தில் ஜீப் ஒன்று மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 50 மீட்டர் ஆழத்தில் ஜீப் விழுந்து முற்றிலும் நொறுங்கியது.

  விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதற்கட்டமாக அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் உதவியுடன் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

  இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர். மேலும் படுகாயம் அடைந்த நான்கு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

  பைஜ்ரோ கிராமத்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான லாசி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  பவுரி மாவட்டத்தின் தலிசைன் பிளாக்கில் உள்ள பைஜ்ரோ வளைவில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
  Next Story
  ×