என் மலர்

  செய்திகள்

  இயற்கை பேரழிவை எதிர்கொள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
  X

  இயற்கை பேரழிவை எதிர்கொள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அதிகமான பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மந்திரிகள் மாநாட்டில் பேசினார்.
  புதுடெல்லி:

  இயற்கை பேரழிவை குறைப்பது தொடர்பாக ஆசிய நாடுகளின் மந்திரிகள் மாநாடு இன்று டெல்லியில் நடந்தது.

  மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

  இயற்கை பேரழிவு எந்த வடிவத்தில் வந்தாலும் அதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை எதிர்கொள்ளும் திறமையும் ஆற்றலும் பெண்களுக்கு உண்டு. எனவே இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அதிகமான பெண்களுக்கு அளிக்க வேண்டும்.

  நமக்கு பெண் என்ஜினீயர்கள் அதிகம் தேவை. பேரழிவுகளில் பாதிக்கப்படுபவர்கள் மறுவாழ்வு பெற பெண்களின் சுய உதவி குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
  Next Story
  ×