என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மும்பை: 128 பேருடன் இன்று தரையிறங்கும்போது ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது
Byமாலை மலர்18 Oct 2016 10:56 AM IST (Updated: 18 Oct 2016 10:56 AM IST)
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் 128 பேருடன் இன்று காலை தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இருந்து மும்பை நகருக்கு வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான தடம் எண்: 614 கொண்ட A320 ரக ஏர்பஸ் விமானம் விமானிகள், பணியாளர்கள், பயணிகள் உள்பட 128 பேருடன் இன்று காலை 9.04 மணியளவில் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது, அவ்விமானத்தின் டயர்களில் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து, சிதறியது. டயர் வெடித்த அதிர்ச்சியை உணர்ந்த பயணிகள் பீதியடைந்தனர். எனினும், ஓடுபாதையில் ஊர்ந்துசென்ற விமானம் எவ்வித ஆபத்துமின்றி வழக்கமான நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கியதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து தடம் எண்: 651 ஆக ராய்பூருக்கு புறப்பட்டு செல்லவேண்டிய இந்த விமானத்துக்கு பதிலாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோப்பு படம்
Next Story
×