search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி ஆரம்பம்: ஒருமாத காலம் நடக்கிறது
    X

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி ஆரம்பம்: ஒருமாத காலம் நடக்கிறது

    குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் மாதம் 3–வது அல்லது 4–வது வாரத்தில் தான் தொடங்கும். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக, ஜி.எஸ்.டி. மசோதாவுடன் இணைந்த 2 மசோதாக்களை நிறைவேற்ற ஏதுவாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் உள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி ஆனந்த் குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×