என் மலர்

  செய்திகள்

  வாக்குச்சாவடி இல்லாததால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் உ.பி. கிராம மக்கள்
  X

  வாக்குச்சாவடி இல்லாததால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் உ.பி. கிராம மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வாக்குப்பதிவு மையம் இல்லாததால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறியுள்ளனர்.
  முசாபர்நகர்:

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சாரப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் முக்கிய பிரச்சனைகள் ஒவ்வொன்றாக எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

  அவ்வகையில், முசாபர்நகர் மாவட்டம் அக்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊரில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் கோரிக்கை நிறைவேறாததால் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

  போராட்டக் குழுவிற்கு தலைமை தாங்கும் கிராமத் தலைவர் முஸ்டாகிம் அகமது இதுபற்றி கூறுகையில், “வாக்குச்சாவடி இல்லாததால் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம். இங்குள்ள வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள பசாயிச் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

  எனவே, அக்லாப்பூர் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்களின் கோரிக்கையை கேட்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

  Next Story
  ×