என் மலர்

  செய்திகள்

  காளஹஸ்தியில் சீர்வரிசை கேட்டு மகளை வீட்டுக்கு அனுப்பியதால் ஆசிரியர் தற்கொலை
  X

  காளஹஸ்தியில் சீர்வரிசை கேட்டு மகளை வீட்டுக்கு அனுப்பியதால் ஆசிரியர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காளஹஸ்தியில் சீர்வரிசை கேட்டு மகளை வீட்டுக்கு அனுப்பியதால் ஆசிரியர் தற்கொலை கொண்ட சம்பவத்தையடுத்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  காளஹஸ்தி:

  காளஹஸ்தி அடுத்த ஈஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா (வயது 45). அவர், புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

  அவரின் மகள் நீலிமா. இவருக்கும், சித்தூர் மண்டலம் சின்னராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்த அமர்நாத் என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அமர்நாத் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

  திருமணம் ஆகி ஒரு ஆண்டாக குடும்பம் அமைதியாக சென்றது. அதைத்தொடர்ந்து அமர்நாத் தனது மனைவியிடம் கார் வாங்க வேண்டும், உன் தாய் வீட்டுக்குச் சென்று ரூ.3 லட்சம் பணம் வாங்கி வரும்படி கூறி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட சந்திரய்யா, மகள் திருமணத்தின் போது வழங்க வேண்டிய அனைத்து சீர் வரிசை பொருட்களும் வழங்கி விட்டோம். தற்போது நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். அதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால், தன்னால் 3 லட்சம் ரூபாய் வழங்க முடியாது என்று கூறி விட்டார்.

  அதைத்தொடர்ந்து ஈஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி அமர்நாத்தை சமரசம் செய்தனர். அதில் அமர்நாத் சமரசம் ஆகவில்லை. மனைவி நீலிமாவை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். நீலிமாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கேட்ட சந்திரய்யா தனது டைரியில் எழுதி வைத்து விரக்தியில் இருந்தார்.

  இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரய்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×