என் மலர்

  செய்திகள்

  இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் சோனியா காந்தி சந்திப்பு
  X

  இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் சோனியா காந்தி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நலக்குறைவால் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்துவந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
  புதுடெல்லி:

  உத்தரபிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வாராணாசியில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்றைய தினமே திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

  உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  தோள்பட்டை காயத்திற்கும் சிகிச்சை பெற்ற சோனியா காந்தி உடல்நலம் தேறிய பின்னரும் இரு மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார்.

  இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை டெல்லியில் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார். இந்த போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
  Next Story
  ×