என் மலர்

  செய்திகள்

  நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய மந்திரிசபை கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் தீவிர ஆலோசனை
  X

  நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய மந்திரிசபை கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் தீவிர ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபையின் பாதுகாப்பு கமிட்டி தீவிர ஆலோசனை நடத்தியது.
  புதுடெல்லி:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி பகுதியில் இருக்கும் ராணுவ தலைமையகத்தின்மீது கடந்த மாதம் 18-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர்.

  இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

  இதற்கிடையே, கடந்தவாரம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய கமாண்டோ படையினர் அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் சுமார் 50 தீவிரவாதிகளை கொன்று குவித்தனர்.

  இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மத்திய மந்திரிசபையின் பாதுகாப்பு கமிட்டி தீவிர ஆலோசனை நடத்தியது.

  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலவிவரும் தற்போதைய நிலவரம் மற்றும் பிறநாடுகளுடனான இந்தியாவின் சர்வதேச எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடைபெற்றதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  Next Story
  ×