என் மலர்

  செய்திகள்

  நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: 2 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
  X

  நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: 2 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் விகாஷ், விஷால் இருவருக்கும் தண்டனை காலத்தை 30-ல் இருந்து 25 ஆண்டுகளாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
  புதுடெல்லி:

  உத்தரபிரதேச மாநில அரசியல் பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான டி.பி. யாதவின் மகள் பார்தியின் காதல் விவகாரம் தொடர்பாக நிதிஷ் கட்டாரா என்ற இளைஞர் 2002-ல் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

  இந்த கவுரவக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட டி.பி.யாதவின் மகன் விகாஸ் (வயது 39) அவருடைய உறவினர் விஷால் (37) மற்றும் சுக்தேவ் (40) ஆகிய மூவருக்கும் கீழ்கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கைதிகள் கடந்த 2014-ம் ஆண்டு மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, விகாஷ், விஷால் இருவருக்கும் கொலை குற்றத்திற்காக தலா 25 ஆண்டு சிறைத் தண்டனையும், சாட்சியங்களை அழித்ததற்காக கூடுதலாக 5 ஆண்டுகளும் தண்டனையும் விதித்தது. இன்னொரு கைதி சுக்தேவுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

  இதை 14 ஆண்டுகளாக குறைக்கவேண்டும் என்று கோரி கைதிகள் மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், விகாஷ், விஷால் இருவருக்கும் தண்டனை காலத்தை 30-ல் இருந்து 25 ஆண்டுகளாக குறைத்தனர். சுக்தேவின் தண்டனைக் காலமும் 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டது.

  Next Story
  ×