என் மலர்

  செய்திகள்

  சத்யேந்திர குமார் ஜெயின்
  X
  சத்யேந்திர குமார் ஜெயின்

  டெங்கு, சிக்குன் குனியா விவகாரத்தில் டெல்லி சுகாதார மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெங்கு மற்றும் சிக்குன் குனியா பிரச்சனையில் டெல்லி சுகாதார மந்திரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  புதுடெல்லி:

  டெல்லியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு தொடர்ந்து ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். நோய் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தீவிர சிகிச்சை அளித்தும் டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை அங்கு கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் அவற்றை கட்டுப்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணையின் போது, டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும் படி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

  இதற்கிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசு சார்பில் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

  மேலும், அவற்றை தாக்கல் செய்ய டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திரகுமார் ஜெயின் சார்பில் 24 மணி நேரம் கால அவகாசம் கேட்டு மனு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். டெங்கு மற்றும் சிக்குன் குனியாவால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

  இந்த நேரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 24 மணி நேரம் தேவையில்லை என தெரிவித்தார். மேலும், மந்திரி சத்யேந்திர குமார் ஜெயினுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
  Next Story
  ×