என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம்-கேரளாவில் நாசவேலைக்கு சதி: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 7 பேர் கைது
Byமாலை மலர்3 Oct 2016 7:02 AM GMT (Updated: 3 Oct 2016 7:02 AM GMT)
தமிழகம் மற்றும் கேரளாவில் நாச வேலைகளில் ஈடுபட சதிதிட்டம் தீட்டிய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் உள்பட 21 பேர் திடீரென மாயமானார்கள். அவர்களில் சிலர் உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். நாங்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியா சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து விட்டோம், இனி தங்களை தேட வேண்டாம் என்றுகூறினர். இதைக் கேட்டு அதிர்ந்து போன உறவினர்கள் கேரள அரசுக்கு தகவல் தெரிவித்தனர். ஐ.எஸ். அமைப்பில் இணைந்த உறவினர்களை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கேரள அரசு இந்த தகவலை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்றது. மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளும் கேரளா வந்து மாயமானவர்களின் பின்னணி, அவர்களை சிரியா அழைத்துச் சென்ற கும்பல் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினர்.
அப்போது ஐ.எஸ். அமைப்பினர் சமூக ஊடகங்கள் மூலம் கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியினை ரகசியமாக நடத்தி வந்தது தெரிய வந்தது.
கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பலருக்கு ஐ.எஸ். அமைப்பின் பிரதிநிதிகளோடு தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கும்பல் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கிராமங்களில் சந்தித்து பேசுவதும், அப்போது ஐ.எஸ். அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்தோருக்கு மூளைச்சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்வதும் தெரிய வந்தது.
அங்கு அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி நாச வேலைகளில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகளை கடந்த சில வாரங்களாக மோப்பம் பிடித்த தேசிய புலனாய்வு முகமையின் உயர் அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரகசியமாக வந்து முகாமிட்டனர்.
மாநில அரசின் துணையுடன் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தமிழக, ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் உள்ள மலைகிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலை உச்சியில் உள்ள பாறை மறைவில் நேற்று தீவிரவாத கும்பலின் ரகசிய கூட்டம் நடக்க இருப்பதும், இதில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பங்கேற்க இருப்பதும் தெரிய வந்தது.
உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கனகமலை குன்று பகுதியை உள்ளூர் போலீசார் துணையுடன் முற்றுகையிட்டனர்.
மாலையில் தீவிரவாத குழுவினர் ஒன்று சேர்ந்ததும் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டுச் சென்றனர்.
1.மன்சீத் என்ற உமர்அலி என்ற முத்துக்கா(வயது30), கண்ணூர் கேரளா, 2. அபுபஷீர் என்ற ரஷீத் என்ற புச்சா என்ற அமீர்(29) கோழிக்கோடு, 3.சுவாலிக் முகமது என்ற யூசுப் என்ற அபுஹசானா(26) வெங்கநல்லூர், திருச்சூர்,4. ஸ்வாபாம்(25) பொன்னுமுட்டம், திரூர், 5. ஜாசிம்(25) குட்டியாடி, கோழிக்கோடு. 6. ராம்ஜத் நகீலன் கன்டியல் என்ற ஆமு(24) குட்டியாடி, கோழிக்கோடு.
கைதான 6 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை போலீஸ் காவலில் எடுக்கவும் மனு செய்தனர்.
கைதான சுவாலிக்முகமது என்ற யூசுப் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்துள்ளார். அங்கும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய தகவல்களும் தெரிய வந்தது.
இதற்கிடையே கைதான 6 பேரிடமும் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் கடையநல்லூர் சென்றனர். அங்கு வாடகை வீட்டில் பதுங்கி இருந்த ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் சுபஹானி என்பவரை கைது செய்தனர். அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் தொடு புழா ஆகும். அவரை சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாணை நடத்தப்பட்டது.
கைதானவர்களில் அபுபஷீர் என்ற ரஷீத் கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர். பஷீருடன் கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நவாஸ்(19), நவாஸ் கான்(24), உபைசுல் ரகுமான்(24), நபி (23) ஆகிய 4 பேர் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. போலீஸ் அதிகாரிகள் 20 பேர் நேற்று இரவு கோவை வந்தனர். மாநகர போலீசார் உதவியுடன் நவாஸ் உள்பட 4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்களது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நவாஸ், நவாஸ்கான், உபைசுல் ரகுமான், நபி ஆகிய 4 பேரையும் விசாரணைக்காக கோவை மாநகர போலீஸ் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு 4 பேரிடமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் 4 பேரும் பேஸ்புக்கில் தீவிரமாக கருத்துகளை பதிவு செய்து வந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்கு பஷீருடன் தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் மாநில போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×