search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேப்பர் வெட்டும் எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை மீண்டும் பொருத்தம்
    X

    பேப்பர் வெட்டும் எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை மீண்டும் பொருத்தம்

    பேப்பர் வெட்டும் எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை மீண்டும் பொருத்தப்பட்டது.
    மும்பை :

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹூசேன் (வயது 19). இவர் வசாய் கிழக்கு சாத்திவிலி பகுதியில் உள்ள பேப்பர் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல ஆலையில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஹூசேனின் வலது கை பேப்பர் வெட்டு எந்திரத்தில் சிக்கியது. இதில் எந்திரத்தின் கூர்மையான பிளேடு வெட்டியதில் ஹூசேனின் கை மணிக்கட்டு பகுதி துண்டானது. மேலும் ரத்தம் கொட்டியது.

    ஹூசேனின் கை துண்டாகி தரையில் கிடப்பதை பார்த்து அங்கு வேலையில் இருந்த பிற தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்த வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வசாயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் ஹூசேனின் கை மீண்டும் பொருத்தப்பட்டது.

    ஹூசேனிடம் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் 9 மாதங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவரின் காயம் முழுமையாக ஆறவே 6 மாதங்கள் வரை ஆகும். அதன் பிறகே அவரால் அந்த வலது கையை பயன்படுத்த முடியும் எனவும் டாக்டர்கள் கூறினர்.
    Next Story
    ×