search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவாஸ்-இ-பஞ்சாப் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் சித்து
    X

    அவாஸ்-இ-பஞ்சாப் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் சித்து

    அவாஸ்-இ-பஞ்சாப் என்ற பெயரில் புதிய கட்சியை நவ்ஜோத் சிங் சித்து இன்று தொடங்கியுள்ளார்.
    சண்டிகர்:

    பா.ஜனதா சார்பில் மேல்-சபை எம்.பி.யாக இருந்த பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகியதுடன், தனது மேல்-சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால் அகாலிதளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பர்கத் சிங், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான பெயின் சகோதரர்கள் ஆகியோருடன் இணைந்து ‘அவாஸ்-இ-பஞ்சாப்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க சித்து முடிவு செய்திருந்தார்.

    இந்நிலையில், நவ்ஜோத் சிங் சித்து அவாஸ்-இ-பஞ்சாப் என்ற கட்சியை இன்று முறைப்படி தொடங்கினார்.

    புதிய கட்சியை தொடங்கி வைத்த சித்து பேசியதாவது:

    பஞ்சாப் மாநிலத்தை எழுச்சிப் பெற வைப்பதே எங்கள் கட்சியின் நோக்கமாகும். நான் அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக மட்டும்தான், சுயலாபத்திற்காக இல்லை. ஒரு நல்ல மனிதர் நூறு கெட்ட மனிதர்களை விட மேலானவர், என்ற எங்களுடைய முழக்கம் பஞ்சாப்பில் எங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.

    பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் ஆளும் அகாலி தளம் கட்சிகளை எதிர்க்கும் ஒரு வலிமையான சக்தியாக அவாஸ்-இ-பஞ்சாப் கட்சி திகழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×