என் மலர்

  செய்திகள்

  செல்போன் ஆப்-ல் டிரைவிங் லைசென்சு முறை விரைவில் அமல்: நிதின் கட்காரி தகவல்
  X

  செல்போன் ஆப்-ல் டிரைவிங் லைசென்சு முறை விரைவில் அமல்: நிதின் கட்காரி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இனி, லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக போக்குவரத்துதுறை செல்போன் ‘ஆப்’ ஒன்றை உருவாக்க உள்ளது.
  புதுடெல்லி:

  வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் கையில் டிரைவிங் லைசென்ஸ், மற்றும் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் கேட்கும் போது அவற்றை காண்பிக்க வேண்டும்.

  இனி, லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக போக்குவரத்துதுறை செல்போன் ‘ஆப்’ ஒன்றை உருவாக்க உள்ளது. இதில், அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கும்.

  இந்த ‘ஆப்’பை நாம் செல்போனில் டவுன் லோடு செய்து வைத்தக் கொண்டால் போதும். அதில், நமது லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றிதழ் விவரங்கள் இருக்கும். அதை சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் காண்பித்தால் போதும்.

  பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த முறை அமலுக்கு வருகிறது. இந்தியாவில் 19 கோடியே 50 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 கோடி பேர் டிரைவிங் லைசென்ஸ் பெற்று இருக்கிறார்கள். இவர்களுடைய அனைத்து விவரங்களும் செல்போன் ‘ஆப்’பில் இருக்கும்.

  விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார். இந்த முறையால் போக்குவரத்து சம்பந்தமான ஊழல்கள் குறையும். மேலும் இதை விமான நிலையம் போன்றவற்றில் அடையாள அட்டையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×