search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்.ஐ.ஆர். விவரங்களை 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
    X

    எப்.ஐ.ஆர். விவரங்களை 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக இந்திய இளைஞர்கள் வக்கீலகள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி. நாகப்பன் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், "எப்.ஐ.ஆர். பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான எப்.ஐ.ஆர்.களை பதிவேற்றம் செய்வதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

    இண்டர்நெட் வேகம் மோசமாக உள்ள மாநிலங்களில் 72 மணி நேரத்திற்குள் எப்.ஐ.ஆர்.க்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆதாயம் தேடக் கூடாது" என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×