என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலேரியா நோய்க்கு ஒருவர் பலி
Byமாலை மலர்6 Sep 2016 2:43 PM GMT (Updated: 6 Sep 2016 2:43 PM GMT)
டெல்லியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா நோய்க்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
புதுடெல்லி:
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா நோய் தற்போது டெல்லியில் பரவத் தொடங்கி உள்ளது. எனவே, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மலேரியா அறிகுறி தென்பட்டால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியின் மண்டவாலி பகுதியைச் சேர்ந்த பிரவீன் ஷர்மா (30) என்பவர் மலேரியா காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். மலேரியாவின் தாக்கம் காரணமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில், மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துமவனையில் சேர்த்தபோது அவர் பலியானதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அவரது உடல் நிலை மோசமானது குறித்து தங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்று மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரையில் மலேரியா நோய்க்கு டெல்லியில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சீசனில் இதுவரையில் 19 பேருக்கு மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×