என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை தொடங்கினார்
Byமாலை மலர்6 Sep 2016 7:49 AM GMT (Updated: 6 Sep 2016 7:49 AM GMT)
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறயுள்ள நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெகா யாத்திரையை இன்று தொடங்கினார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2011) தொடக்கத்தில் சட்டசபை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களைக் கவர இந்த 4 கட்சிகளும் விதம், விதமான திட்டங்களை செயல்படுத்தக் தொடங்கி உள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி அங்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் முதல்-அமைச்சர் வேட்பாளராக ஷீலா தீட்சித் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் மிகப் பிரமாண்டமான யாத்திரை நடத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டார்.
இதையடுத்து உத்தர பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 25 நாட்களுக்கு “மெகா யாத்திரை”க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி உத்தரபிரதேசத்தில் உள்ள தியோரியரினும் நகரில் இன்று யாத்திரையை தொடங்கினார்.
இந்த யாத்திரையின் போது பொதுமக்களை சந்தித்து பேச ராகுல் திட்டமிட்டுள்ளார். 2,500 கி.மீ. தூரம் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் கிராமங்களில் மக்களுடன் அமர்ந்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளார்.
ராகுலின் இந்த யாத்திரை உத்தரபிரதேசத்தில் உள்ள 407 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் போது பெரிய கூட்டங்கள் எதிலும் ராகுல் பேசப் போவதில்லை.
பொதுமக்களுடன் அதிகம் அவர் கலந்துரையாட உள்ளார். ராகுலின் அரசியல் வாழ்வில் அவர் மேற்கொள்ளும் முதல் பெரிய தேர்தல் பிரசார யாத்திரை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெகா யாத்திரை மூலம் 200 தொகுதிகளில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த முடியும் என்று ராகுல் நம்புகிறார்.

Next Story
×