search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    காஷ்மீர்: போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே இன்று மீண்டும் வெடித்த மோதலில் வாலிபர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான எம்.பி.க்கள் குழு அங்கு ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ள நிலையில் இங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று மீண்டும் வெடித்த போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.

    இன்றைய பலியுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீரில் கடந்த 58 நாட்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×