என் மலர்

  செய்திகள்

  ராபர்ட் வதேரா நில பேரத்தில் முறைகேடு: விசாரணை கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டு
  X

  ராபர்ட் வதேரா நில பேரத்தில் முறைகேடு: விசாரணை கமிஷன் அறிக்கையில் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானா மாநிலத்தில் ராபர்ட் வதேரா நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களின் நில பேரத்தில் முறைகேடு நடந்ததாக விசாரணை கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
  புதுடெல்லி:

  அரியானா மாநிலத்தில் புபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசு நடந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு குர்கானில் உள்ள மனைகள் விற்பனை செய்யப்பட்டன.

  அங்கு 2008-ம் ஆண்டு, மூன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட மனையை ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கிய ராபர்ட் வதேரா, மூன்றே மாதங்களில், அந்நிலத்தை முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்.புக்கு ரூ.58 கோடிக்கு விற்று லாபம் பார்த்ததாக பேசப்பட்டது. அந்த நில பேரத்தை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா ரத்து செய்ய முயன்றபோது, அவரை காங்கிரஸ் அரசு இடமாற்றம் செய்தது.

  இதற்கிடையே, அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. முந்தைய காங்கிரஸ் அரசில் நடந்த ராபர்ட் வதேராவின் நில பேரம் உள்பட 250 நில பேரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி திங்க்ரா, தனது விசாரணையை முடித்து, நேற்று 182 பக்க அறிக்கையை அரியானா முதல்-மந்திரியிடம் தாக்கல் செய்தார்.

  இதுபற்றி நிருபர்களிடம் பேசிய நீதிபதி திங்க்ரா, ‘நில பேரங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அரசு தரப்பும், தனியாரும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அரசுத்தரப்பு மற்றும் தனியார் என அனைவரையும் குறிப்பிட்டுள்ளேன். தவறு நடந்துள்ளதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. முறைகேடு நடந்திருக்காவிட்டால், ஒரே வரியில் அறிக்கை தாக்கல் செய்திருப்பேன். முறைகேடு நடந்திருப்பதால்தான் 182 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்’ என்று கூறினார்.

  விசாரணை கமிஷன் அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி புபிந்தர்சிங் ஹூடா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாகவும், சலுகை காட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  ஆனால், இந்த குற்றச்சாட்டை புபிந்தர்சிங் ஹூடா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

  இந்த விசாரணை கமிஷனே அரசியல் உள்நோக்கத்துடனும், பழிவாங்குவதற்காகவும் அமைக்கப்பட்டது. ஒரு முக்கிய குடும்பத்தை சேர்ந்தவரை குறிவைத்தே அமைக்கப்பட்டது. நான் யாருக்கும் சலுகை காட்டவில்லை. எல்லாம் சட்டரீதியாகவே நடந்தது.

  நில உரிமம் வழங்குவதில், எனது அரசு புதிய கொள்கை எதுவும் வகுக்கவில்லை. முந்தைய பன்சிலால் அரசு, சவுதாலா அரசுகளின் கொள்கையே பின்பற்றப்பட்டது. பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை தெரியும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×