search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 வருட உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட ஐரோம் சர்மிளா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்
    X

    16 வருட உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட ஐரோம் சர்மிளா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

    ஆயுதப்படைகள் சட்டத்திற்கு எதிராக 16 வருடங்களாக நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சமீபத்தில் முடித்துகொண்ட ஐரோம் சர்மிளா, உடல்நிலை முன்னேற்றத்திற்கு பின் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார்.
    இம்பால்:

    மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஐரோம் சர்மிளா, சமீபத்தில் முறைப்படி முடித்துக் கொண்டார்.

    மணிப்பூர் மாநிலத்தின் முதல் மந்திரி ஆவதே தனது விருப்பம் என்று அவர் கூறினார். ஒரு மாநில முதல் மந்திரியால்தான் மத்திய அரசின் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து போராட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும் பல ஆண்டுகளாக அவர் திட உணவுகள் எடுத்துக் கொள்ளாததால், ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தங்கியிருந்தார்.

    இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டத்தை மருத்துவர்கள் உறுதி செய்ததையடுத்து ஐரோம் சர்மிளா அஸ்பத்திரியிலிருந்து நேற்று வெளியேறியுள்ளர்.

    பின்பு இம்பாலில் உள்ள புனித தளங்களுக்கு சென்று பிராத்தனை செய்தார். அங்குள்ள பெண்கள் அமைப்பினர் 16 வருட உண்ணாவிரத போராட்ட முடிவிற்கு பிறகு அஸ்பத்திரியில் இருந்து வெளிவந்துள்ள அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது பேசிய சர்மிளா, மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடத்தும் போராட்டம் தொடரும் என்றும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    Next Story
    ×