search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் காணாமல்போன 3 சிறுமிகள் பிணங்களாக மீட்பு
    X

    உ.பி.யில் காணாமல்போன 3 சிறுமிகள் பிணங்களாக மீட்பு

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தில் சமீபத்தில் காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளின் பிரேதங்கள் இன்று ஆற்றில் இருந்து மீட்டெடுக்கப்பட்டன.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பரேலி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளைப் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவந்த நிலையில், மிர்கஞ்ச் பகுதியில் உள்ள பக்ரா ஆற்றில் மூன்று பிணங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளின் பிரேதங்களையும் மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த மூன்று சிறுமிகளும் கற்பழித்து, கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர்களுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×