என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆந்திராவுக்கு சிறப்பு அஸ்தந்து தருவதாக ஏமாற்றினார்: பிரதமர் மோடி மீது நடிகர் பவன் கல்யாண் தாக்கு
நகரி:
ஜனசேனை கட்சியின் பொதுக்கூட்டம் திருப்பதியில் நடந்தது. இதில் கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு திருப்பதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்தால் ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.
ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் ஏமாற்றி விட்டார். அதுபற்றி கேட்டால் மோடி தற்போது வாய்திறக்க மறுக்கிறார். கொடுத்த வாக்கை மோடி மீறக்கூடாது.
தலைநகரம் கூட இல்லாமல் ஆந்திராவை காங்கிரஸ் கட்சி தனி மாநிலமாக பிரித்துவிட்டது. அதே தவறை பா.ஜனதாவும் செய்யக்கூடாது. ஆந்திர மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 10 ஆண்டு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
பசுவதையில் மோடி காட்டும் அக்கறையை ஆந்திர இளைஞர்கள் மீதும் காட்ட வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மேல்சபையில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் ஆந்திராவை பிரித்த பிறகு அம்மாநிலத்துக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.
அப்போது மேல்சபையில் பேசிய வெங்கையா நாயுடு 5 ஆண்டுகள் போதாது. 10 வருடம் அல்லது 15 வருடம் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார். ஆனால் வெங்கையா நாயுடு தற்போது வாய் திறக்க மறுக்கிறார்.
ஆந்திர எம்.பி.க்கள் பெரும் செல்வந்தர்களாக இருப்பதால் ஆந்திரா செல்வந்தர்கள் நிறைந்த மாநிலம் என்று மத்திய அரசு நினைக்கக்கூடாது.
இங்கு மக்கள் அனைவரும் ஏழைகள் தான். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கா விட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று ஆந்திர எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
ஆனால் யாரும் அப்படி செயல்படுவதில்லை. மத்திய அரசை எதிர்த்தால் சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு மிரட்டும் என்று பயப்படுகிறார்கள்.
நான் காப்பு இனத்தவன் என்று எனக்கு ஜாதி முத்திரை குத்த பார்க்கிறார்கள். எனது மனைவி ரஷ்யாவை சேர்ந்த கிறிஸ்தவர். எனது மகள் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுப்பது இல்லை.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஐதராபாத் வந்த போது என்னை சந்தித்தார். மாநில கட்சிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை. எனவே பா.ஜனதாவுடன் இணையுங்கள் என்றார்.ஆனால் நான் ஜனசேனை என்பது தெலுங்கு மக்களுக்கான கட்சி. நான் பா.ஜன தாவில் சேர மாட்டேன் என்று கூறிவிட்டேன்
ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்காவிட்டால் இனி போராட்டம் நடத்த உள்ளேன். தனி மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பவன் கல்யாணின் பேச்சுக்கு நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2½ ஆண்டுகளாக போராடுகிறார். ஆனால் பவன் கல்யாண் ஆந்திர மக்கள் மீது அக்கறை வந்தி ருப்பது போல இப்போது தான் காட்டிக் கொள்கிறார்.
சிறப்பு மாநில அந்தஸ்து பற்றி பேசும் பவன் கல்யாண் அதற்கு குரல் கொடுக்காத சந்திரபாபு நாயுடுவை கண்டிக்காதது ஏன்? ஜெகன்மோகன் ரெட்டிக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக சந்திரபாபு நாயுடுதான் தற்போது பவன் கல்யாண் போராட்டத்துக்கு தூண்டி விடுகிறார்.
இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்