என் மலர்

  செய்திகள்

  தொடரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பாகிஸ்தான் தூதரை அழைத்து எதிர்ப்பை தெரிவித்தது இந்தியா
  X

  தொடரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பாகிஸ்தான் தூதரை அழைத்து எதிர்ப்பை தெரிவித்தது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்தது.
  புதுடெல்லி:

  காஷ்மீரில் பதட்டத்தை உருவாக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு அவ்வப்போது சுட்டிக்காட்டி கண்டித்து வருகிறது.

  இந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் செக்டாரில் நேற்று  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். கடந்த மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த பகதூர் அலி என்ற தீவிரவாதியை இந்திய அதிகாரிகள் கைது செய்து, அவனிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர்.

  இவ்வாறு தொடர்ந்து நடந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கண்டிக்கும் வகையில் இந்திய வெளிறவுத்துறை,  இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

  பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இன்று தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்ததுடன், சமீபத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியும் பாகிஸ்தானைச் சேர்ந்தவனுமான பகதூர் அலி கைது செய்யப்பட்டது குறித்தும் தெரிவித்தார்.
  Next Story
  ×