என் மலர்

  செய்திகள்

  கலிக்கோ புல் மறைவு எதிரொலி: ஆதரவாளர்கள் தீவிர போராட்டம்- வன்முறை
  X

  கலிக்கோ புல் மறைவு எதிரொலி: ஆதரவாளர்கள் தீவிர போராட்டம்- வன்முறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் மரணமடைந்தையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
  இடாநகர்:

  அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் இன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மாதம் முதல் மந்திரி பதவியை இழந்த பின்னர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாக கலிக்கோ புல் வெளியாட்கள் யாருடனும் சந்தித்து பேசவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

  அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளன். அருணாசல பிரேதசத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், கலிக்கோ புல் மரணத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் பீமா கண்டுவின் பங்களாவின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். கலிக்கோ புல்லின் இறப்பு இயற்கைக்கு மாறானது என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

  அவரது ஆதரவாளர்கள் துணை முதல்வரின் கட்டி முடிக்கப்படாத 2 கட்டிடங்ளுக்கு தீ வைத்துள்ளனர். மற்றொரு அமைச்சரின் வீட்டையும் சேதப்படுத்தினர். கல்வீச்சு சம்பவங்களில் 4 பேர் காயமடைந்ததாக இடா நகர் போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையே, மக்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், அமைதி காக்கும்படியும் கலிக்கோ புல்லின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.
  Next Story
  ×