என் மலர்

  செய்திகள்

  55 சதவீத உணவுப் பொருட்கள், மருந்துகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சேர்க்கப்படவில்லை: பிரதமர் மோடி தகவல்
  X

  55 சதவீத உணவுப் பொருட்கள், மருந்துகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சேர்க்கப்படவில்லை: பிரதமர் மோடி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏழைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 55 சதவீதம் உணவுப் பொருட்கள், மருந்துகளில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

  புதுடெல்லி:

  சரக்கு மற்றும் சேவை வரி மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு மே மாதம் நிறை வேற்றப்பட்டது.

  மாநிலங்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற கடந்த ஓராண்டாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு முயன்றது. ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட் டதால் அதை நிறைவேற்ற இயலவில்லை.

  இதற்கிடையே காங்கிரஸ் தெரிவித்த சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் சரக்கு மற்றும் சேவை வரியை நிறைவேற்ற சுமூகமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்பட்டது.

  அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைத்து கட்சி எம்.பி.க்களும் இந்த புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த நிதி ஆண்டு முதல் இந்த மசோதா அமலுக்கு வர உள்ளது.

  சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் பண வீக்கம் அதிகரிக்கும். அது சாதாரண பொது மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு கட்சிகள் அச்சம் தெரிவித்தன. இதற்கு பிரதமர் மோடி 42 நிமிடம் விளக்கம் அளித்து பதில் கொடுத்தார். அவர் கூறியதாவது:-

  சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் வரி தீவிரவாதத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம். எனவே இந்த நாள் மிகவும் முக்கிய நாளாகும். இந்த மசோதா நிறைவேறியதை எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றி-தோல்வியாக பார்க்க கூடாது. இது நம் நாட்டுக்கு கிடைத்த வெற்றி.

  நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு முறை அமலுக்கு வர உள்ளதால் சிறு வணிகர்கள், நுகர்வோர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். ஏழைகளுக்கு பாதிப்பு வராது. அதற்காகவே ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மருந்துகளில் 55 சதவீதம் இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை.

  சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மீது இன்னும் சிலருக்கு சந்தேகம் உள்ளது. நான் கூட குஜராத் முதல்வராக இருந்த போது இந்த மசோதா மீது சந்தேகம் கொண்டிருந்தேன். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அது பல வகைகளில் உதவும் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

  இந்த வரி விதிப்பால் பாதிப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

  சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் போது போன் கட்டணங்கள் அதிகரிக்கும். சிறிய ரக கார்கள் விலை உயரும். பார்சல்-கூரியர் கட்டணங்கள் அதிகரிக்கும்.

  ஓட்டல்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக கூடும். நகைகள் விலையும் உயரும்.

  அதே சமயத்தில் நடுத்தர மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வகையில் சில பொருட்கள் விலை குறையும். மேஜை, நாற்காலி, உடைகள், சாடிலைட் டி.வி., பேட்டரி, ஏர்-கூலர்கள், பெயிண்ட், சிமெண்ட், மின் விசிறி, ஹீட்டர்கள் விலை குறையும்.

  பெரிய கார்கள் விலையும் சற்று குறையும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஜி.எஸ்.டி. மசோதா மூலம் அதிகமாகும்.

  Next Story
  ×