என் மலர்

  செய்திகள்

  மக்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது
  X

  மக்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது. ஜி.எஸ்.டி மசோதா ஓட்டெப்பில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.
  புதுடெல்லி:

  ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில்  பிரதமர் மோடி மசோதா குறித்து உரை ஆற்றினார்.

  பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

  பின்னர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா மீது மக்களவையில் ஓட்டெடுப்பு நடந்தது. இந்த விவாதத்தில் 443 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

  மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா ஓட்டெப்பில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது. ராஜ்சபாவில் ஜி.எஸ்.டி மசோதா ஓட்டெடுப்பிலும் அ.தி.மு.க பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×