search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்: மோடி
    X

    ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்: மோடி

    ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும் என பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
    புதுடெல்லி:

    திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    நுகர்வோர் நலன் கருதி ஜி.எஸ்.டி. மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியதன் மூலம், வரி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றம் வெளிப்படைத்தன்மையை நோக்கிய முதல்படி இது. மத்திய மாநில அரசுகளிடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மேம்பட்டுள்ளது.

    இந்த மசோதாவில் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளும் நடந்தது. ஜி.எஸ்.டி. மசோதாவானது மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனையை எளிதாக்கக்கூடியது. ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்.

    ஜி.எஸ்.டி. விகாரத்தில் யாரும் அரசியலாக்காமல் நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்தனர். இது நிறைவேறும்போது மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×