என் மலர்

  செய்திகள்

  மணிப்பூரில் குண்டுவெடிப்பு: எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்
  X

  மணிப்பூரில் குண்டுவெடிப்பு: எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிப்பூரில் இன்று எல்லைப் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
  இம்பால்:

  மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் எல்லை பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்போக்பி நகர் அருகே சென்றபோது, சாலையில் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது.

  இந்த தாக்குதலில், ராணுவ வாகனத்தில் சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனில் குமார், லால்ஜி யாதவ் ஆகிய இருவரும் 54-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  கடந்த சில தினங்களுக்கு முன் இம்பால் போலோ கிரவுண்டில் உள்ள மாநில அருங்காட்சியகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×