என் மலர்

  செய்திகள்

  காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லா
  X

  காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் பிரச்சினையை மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டர் வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:-

  காஷ்மீரில் தொடர்ந்து நிலமை மோசமாகி வருகிறது. ஆனால் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அவர்களாக கற்பனை செய்து கொண்டு இப்படி கூறுகிறார்கள்.

  இங்கு என்ன நடந்து கொண்டு இருப்பதை, பாரதீய ஜனதாவும், இங்கு அவர்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் உணர்ந்ததாக தெரியவில்லை.

  அவர்களுக்கு மட்டும் தான் இங்கு அமைதி நிலவுகிறது என்ற தோற்றம் தெரிகிறது. பிரதமரைப் பொறுத்தவரை காஷ்மீரில் இப்போது நடக்கும் பிரச்சினையில் எதையும் கண்டு கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார்.

  அவர் எப்போது கண் விழித்து எழுந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறார் என்று தெரிய வில்லை.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×