என் மலர்

  செய்திகள்

  அமீர்கான் பற்றிய என்னுடைய விமர்சனத்தை பலர் பாராட்டினார்கள்: மனோகர் பாரிக்கர்
  X

  அமீர்கான் பற்றிய என்னுடைய விமர்சனத்தை பலர் பாராட்டினார்கள்: மனோகர் பாரிக்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசப்பற்று விவகாரத்தில் அமீர்கான் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை நிறைய பேர் பாராட்டியுள்ளார்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் கூறியதை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் சில தினங்களுக்கு முன்பு விமர்சித்தார். மேலும், நாட்டுக்கு எதிராக பேசுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  இதனையடுத்து மனோகர் பாரிக்கரின் கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி  எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். 

  இந்நிலையில், அமீர்கான் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை நிறைய பேர் பாராட்டியுள்ளார்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பாரிக்கர் கூறியதாவது:-

  தேச எதிர்ப்பாளர்களிடம் கொஞ்சம் அனுதாபம் இருக்கிறது. புனேவில் சொன்னதை நான் திரும்பி சொல்ல விரும்பவில்லை. அதனை பார்க்க விரும்புவர்கள் யு-டூப்பில் பார்த்துக் கொள்ளட்டும். நான் தவறாக கருத்து சொல்லிவிட்டதாக இதுவரை என்னிடம் யாரும் சொல்லவில்லை. எல்லோரும் நான் சரியான கருத்தினை தெரிவித்துள்ளதாகவே பாராட்டுகின்றனர்.

  இவ்வாறு தெரிவித்தார்.
  Next Story
  ×