என் மலர்

  செய்திகள்

  பசு பாதுகாப்பு அமைப்பினர் என்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டனர்: பிரதமர் மோடி திடீர் ஆவேசம்
  X

  பசு பாதுகாப்பு அமைப்பினர் என்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டனர்: பிரதமர் மோடி திடீர் ஆவேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் பசுவதையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தனது மவுனத்தை களைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பசு பாதுகாப்பு அமைப்பினர் தன்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி இந்தூர் மைதானத்தில் ’மை கவ்’ இணையதளம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பொது மக்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றினார். 

  அப்போது பேசிய மோடி,  பசு பாதுகாப்பு அமைப்பினர் தன்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக கூறினார். 

  மேலும் அவர் பேசியதாவது:-

  பசு பாதுகாப்பு தொழில் செய்வோர் என்னை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிலர் இரவு நேரங்களில் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பசு பாதுகாபு என்ற பெயரில் கடைகளை திறந்துள்ளனர்.

  பசு பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளை நடத்துபவர்கள் குறித்து ஆவணங்களை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  பசுக்கள் கொல்லப்படுவதால் சாவதில்லை. பசுக்கள் இயற்கை மாசுபாடுகளால் உயிரிழக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உண்பதால் பலியாகின்றன. இந்த பசு பாதுகாப்பு அமைப்புகள் பிளாஸ்டிக் பொருட்களை தெருவில் வீச வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தால் அதுவே மிகப்பெரிய சேவை.

  இவ்வாறு தெரிவித்தார்.

  குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று கடந்த மாதம் 11-ம் தேதி சரமாரியாகத் தாக்கியது. 

  மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் வலுத்துள்ளன.

  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக தலித் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தனது கருத்தினை அவர் பதிவு செய்துள்ளார். 
  Next Story
  ×