என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை
  X

  கேரளாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
  திருச்சூர்:

  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காணிபையூரை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 68). கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் 13–ந் தேதி வேலப்பன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை டி.வி. பார்க்கலாம் என்று அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது சிறுமி மிகவும் சோர்வாக இருந்தார்.

  இதுகுறித்து மாணவியிடம் ஆசிரியைகள் கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விளக்கி கூறினார்.  இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள் சிறுமியின் உடலில் சோதனை செய்த போது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. பின்னர் சிறுமியை அங்குள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். காப்பக டாக்டர்கள் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து ஆசிரியைகளும், காப்பக நிர்வாகிகளும் வேலப்பன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலப்பனை கைது செய்தனர்.

  இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட முதியவர் வேலப்பனுக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் இல்லிகாடான் தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.
  Next Story
  ×