என் மலர்

  செய்திகள்

  மராட்டிய மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 பிரேதங்கள் மீட்பு
  X

  மராட்டிய மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 பிரேதங்கள் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநிலம், ராய்கட மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஆற்றுக்குள் விழுந்தவர்களில் 17 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
  மும்பை:

  மராட்டிய மாநிலத்துக்கு உட்பட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

  ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை மீது வாகன போக்குவரத்துக்காக மஹத் பகுதியில் சாவித்ரி ஆற்றின்மீது அமைக்கப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சேதமடைந்து உடைந்து விழுந்தது.

  பாலம் உடைந்தபோது அந்தப்பாதை வழியாக சென்ற பல வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அந்தப் பாலத்தின் அடிப்பகுதி வெள்ள அரிப்பால் சேதம் அடைந்து உடைந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், பயணிகளுடன் சென்ற இரண்டு பஸ்கள் உள்பட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன்.

  குறிப்பாக, இரு பஸ்களிலும் சென்றவர்கள் உள்பட 42 பேர் சாவித்ரி ஆற்றில் மூழ்கி காணாமல் போனதாக தெரியவந்தது. வாகனங்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு வரை 14 பிரேதங்கள் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், இன்று காலை மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராய்காட் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் சஞ்சய் பட்டீல் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×