search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்
    X

    மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்

    மாலத்தீவு நோக்கி சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் புகை கிளம்பியதையடுத்து மும்பை விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    மும்பை:

    துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம், மாலத்தீவின் மாலி நகருக்கு புறப்பட்டது. இதில் 309 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்த விமானம் இன்று பிற்பகல் மும்பை வான்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து கரும்புகை வெளிப்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார்.

    இதனால், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அவர், மும்பை விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் பிற்பகல் 2.58 மணிக்கு மும்பை விமான நிலையத்தின் 9-வது ஓடுபாதையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×