search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
    X

    போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

    போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்
    புதுடெல்லி:

    போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி அமெரிக்காவில் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற் கொண்ட பின் நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார்.

    அவர் தனது பயணத்தில் அமெரிக்காவில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை நேரில் கண்டு வந்துள்ளார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளை மீறு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதில் மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டு வோருக்கு தண்டனை மற்றும் அபராதம் படிப்படியாக கடுமையாக்கப்பட்டுள்ளது.

    முதல் முறையாக பிடிபடுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை, 2-வது முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 3-வது முறையாக பிடிபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதில் அபராதம், சிறை தண்டனை ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் இடம் உள்ளது. மற்ற விதி மீறல்களுக்கான தண்டனை விவரம் வருமாறு:-

    * அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறையாக ரூ.400, 2-வது முறையாக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    * ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டு வோருக்கும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    * செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.100, 2-வது முறை ரூ.300 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    * லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வாகனம் உரிமம் ரத்து செய்யப்படும்.

    அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.
    Next Story
    ×