search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்
    X

    சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

    சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திரா வீரர்கள் குடும்பத்தினரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    நகரி:

    சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் சென்ற ராணுவ சரக்கு விமானம் மாயமானது. அதில் 29 பேர் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    மாயமான 29 பேரில் 8 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

    மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்தினரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் வீரர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.



    அவர்களை தேற்றிய ஜெகன்மோகன் ரெட்டி, கடவுளை நம்புங்கள். நிச்சயம் உயிருடன் வருவார்கள் என கூறினார். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், விமானத்தில் சென்று மாயமானவர்களின் குடும்பத்தினரின் வேதனை எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். எனது தந்தை ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டரில் சென்று மாயமானபோது நாங்கள் பட்ட துன்பங்கள் அளவிட முடியாது.

    இந்தியாவில் விமானங்கள் நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது. பழைய விமானங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×