என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாயமான விமானம் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி: மந்திரி அனந்த குமார் பதில்
Byமாலை மலர்26 July 2016 2:42 AM GMT (Updated: 26 July 2016 2:42 AM GMT)
சென்னையில் இருந்து 29 பேருடன் போர்ட்பிளேர் நகருக்கு சென்ற விமானம் மாயமானது பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு மந்திரி அனந்த குமார் பதில் கூறினார்
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சென்னையில் இருந்து 29 பேருடன் போர்ட்பிளேர் நகருக்கு சென்ற விமானம் மாயமானது பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். மாயமான விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஒட்டுமொத்த தேசமே கவலையில் ஆழ்ந்து இருப்பதாகவும், எனவே இதுகுறித்து ராணுவ மந்திரி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
அதற்கு பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமார் பதில் அளிக்கையில், மாயமான விமானம் என்ன ஆனது என்பது குறித்து தேசமும், அரசும் கவலை அடைந்து இருப்பதாகவும், அதை கண்டுபிடித்து மீட்க விமானப்படை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்த கருத்து ராணுவ மந்திரிக்கு தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Next Story
×