search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரேலிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 குற்றவாளிகள் கைது: சுஷ்மா சுவராஜ் தகவல்
    X

    இஸ்ரேலிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 குற்றவாளிகள் கைது: சுஷ்மா சுவராஜ் தகவல்

    இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

    மணாலியில் டாக்சி கிடைக்காமல் நின்று கொண்டிருந்த இஸ்ரேல் பெண்ணிற்கு, ’லிப்ட்’ கொடுப்பதாக கூறி இருவர் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக இமாச்சல பிரதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இஸ்ரேலிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சுஷ்மா பேசியதாவது:-

    இமாச்சல பிரதேசம் முதல்-மந்திரி இடம் பேசி விவரங்களை கேட்டறிந்துள்ளேன். குற்றவாளிகள் 6 பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இமச்சல பிரதேசம் அரசிடம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து இணைப்பில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×